நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி விநியோகத்திற்கான சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:25PM by PIB Chennai
2029-30-ம் நிதியாண்டிற்குள் செயல்படுத்தும் வகையில், ஆண்டொன்றுக்கு 1,319 மில்லியன் டன் திறன் கொண்ட 139 முதல் கட்ட சரக்குப் போக்குவரத்துக்கான இணைப்பு திட்டங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இவற்றில், ஆண்டொன்றுக்கு 589 மில்லியன் டன் ஒட்டுமொத்தத் திறன் கொண்ட 72 திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எஞ்சியுள்ள 67 திட்டங்கள் செயல்படுத்தல், ஒப்பந்தப்புள்ளி கோருதல், திட்டமிடல் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ளன.
நிலக்கரி சரக்கு போக்குவரத்துத் திட்டம், கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை 2029-3 -ம் நிதியாண்டிற்குள் படிப்படியாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலக்கரி விநியோகத்திற்கான சரக்கு ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் நடவடிக்கைகளின் கீழ், 8 ரயில்வே திட்டங்களில், 5 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எஞ்சியுள்ள 3 திட்டங்கள் 2028-ம் நிதியாண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும். மேலும், எதிர்கால நிலக்கரி விநியோகத்திற்காக ரயில்வே அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படவுள்ள 33 முக்கிய திட்டங்களையும் நிலக்கரி அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
எந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளுதல், கன்வேயர் அடிப்படையிலான போக்குவரத்து வசதிகளை அமைக்கும் 139 திட்டங்களில், 72 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. என்றும், எஞ்சியுள்ளவை, 2030 நிதியாண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மின்சார அமைச்சகம், சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத்திற்கான சரக்கு போக்குவரத்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த, செலவு குறைந்த, வலுவான சரக்கு போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மாநிலங்களவையில், கேள்வி ஒன்றிற்கு, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286593®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286785)
आगंतुक पटल : 13