புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை மத்திய புள்ளியியல் அமைச்சகம் கண்காணிக்கிறது
प्रविष्टि तिथि:
20 JUL 2026 3:16PM by PIB Chennai
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள், மாதாந்திர நுகர்வோர் விலைக் குறியீடு, மாதாந்திர தொழில் உற்பத்திக் குறியீடு ஆகிய பல்வேறு குறியீடுகளை தொகுத்து அளிக்கிறது. அத்துடன் தொழிலாளர் எண்ணிக்கை, சமூக நுகர்வு, சுகாதாரம், கல்வி போன்ற முக்கிய சமூக பொருளாதார குறியீடுகளின் குடும்ப ஆய்வுகள் மூலம் விரிவான அதிகாரப்பூர்வ புள்ளியியல், நிர்வாகத் தரவு ஆகியவற்றையும் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடுகிறது. வாழ்க்கைத் தரத்தினை மதிப்பிடுவதற்கு தேவையான பல்வேறு சமூகப் பொருளாதார பரிணாமங்கள் குறித்த சான்றுகளையும் இந்த ஆய்வுகள் அளிக்கின்றன.
மேலும் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தேசிய குறியீட்டுக் கட்டமைப்பை கண்காணிப்பதற்கான முதன்மை அமைச்சகமாகவும் மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்பு சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் நீடித்த தன்மை மற்றும் இதர குடிமக்கள் நல்வாழ்வு தொடர்பான அம்சங்களை உள்ளடக்கிய குறியீடுகளையும் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286548®=3&lang=1
***
SS/IR/LDN/RJ
(रिलीज़ आईडी: 2286740)
आगंतुक पटल : 24