பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பொறுப்பான வணிகம் குறித்த தேசிய மாநாட்டின் நான்காவது பதிப்பு நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2026 7:39PM by PIB Chennai
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான 'இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின்' (ஐஐசிஏ) வணிகப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த, பொறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்த தேசிய மாநாட்டின் (NCRBC) 2026-ஆம் ஆண்டிற்கான நான்காவது பதிப்பு, புது தில்லியில் நிறைவடைந்தது.
நிறைவு விழாவில், இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு திரு அபய் எஸ். ஓகா சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஐஐசிஏ தலைமை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி திரு ஞானேஷ்வர் குமார் சிங் உரையாற்றினார், வணிகப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கரிமா ததிச் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றத்தை வெறும் பொருளாதாரக் குறியீடுகளைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது என்றும், சுற்றுச்சூழல் நலனும் தேசிய வளர்ச்சியின் சமமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாகக் கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஓகா குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான கடமைகளைத் தங்களின் விருப்பத்திற்கு உட்பட்ட அல்லது இரண்டாம் பட்சமான விஷயமாகக் கருதாமல், அவற்றைத் தங்கள் செயல்பாடுகளில் ஆழமாக உள்வாங்கிக்கொள்ளுமாறு பெருநிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286148®=3&lang=1
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2286261)
வருகையாளர் எண்ணிக்கை : 46