தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஹரியானாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணியினபோது விஷவாயுத்தாக்கி தொழிலாளர் உயிரிழந்ததாக வெளியான செய்தி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

प्रविष्टि तिथि: 17 JUL 2026 5:58PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கங்வா கிராமத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் தொட்டியை சுத்தம் செய்யும்போது நச்சு வாயுவைச் சுவாசித்ததால் ஒரு தொழிலாளி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் வெளியான ஊடகச் செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஒப்பந்ததாரர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஊடகச்செய்தியில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை மனித உரிமை மீறல் தொடர்பான  சிக்கல்களை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் ஹிசார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

2026 ஜூலை 16, அன்று வெளியான ஊடகச் செய்தியின்படி, அடைப்பு ஏற்பட்ட குழாய் வழித்தடத்தைச் சரிசெய்வதற்காக ஒரு ஒப்பந்ததாரரால் அந்தத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.  அவர்கள் எந்த விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அந்தத் தொட்டிக்குள் இறங்கியதாகவும், காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285840&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2285991) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी