அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கார்கில் பிராந்தியத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்கு
प्रविष्टि तिथि:
17 JUL 2026 7:07PM by PIB Chennai
கார்கில் பிராந்தியத்தின் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், 'அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் தேவைகளைக் கண்டறிதல்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கடந்த ஜூலை 15ம் தேதி லடாக்கின் கார்கில் அரசு பட்டயக் கல்லூரியில் நடைபெற்றது.
சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுத் தொழில் நுட்பங்களை கிராமப்புற வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு நடைபெற்றது. கார்கில் பகுதி விவசாயம், தோட்டக்கலை, மருத்துவ தாவரங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும், புவியியல் ரீதியான தொலைவு, கடுமையான காலநிலை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவை அப்பகுதியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.
இந்தச் சவால்களை முறியடிக்க, பிராந்தியத்திற்குத் தேவையான குறிப்பிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிந்து, அதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285883®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2285883
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2285987)
आगंतुक पटल : 5