சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் திட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய ஆய்வுக் கூட்டம் நிறைவு

प्रविष्टि तिथि: 17 JUL 2026 3:13PM by PIB Chennai

நோய் தடுப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், புதிதாக உருவாகும் பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மத்திய சுகாதார அமைச்சகம், நோய் கண்காணிப்பு, பொது சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை குறித்த இரண்டு நாள் தேசிய ஆய்வுக் கூட்டத்தை 2026 ஜூலை 16, 17 தேதிகளில் புதுதில்லியில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள், வல்லுநர்கள் பங்கேற்றனர்.

 

 முக்கிய பொது சுகாதாரத் திட்டங்களின் செயலாக்கம், நோய் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தரவு சார்ந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகள் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் பொது சுகாதாரக் கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் குப்தா, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் லவ்னீஷ் ஜி. கிருஷ்ணா உள்ளிட்டோர் முன்னிலையில் இக்கூட்டம் தொடங்கியது.

 

இரண்டு நாள் கூட்டத்தின் போது, மாநில, யூனியன் பிரதேசப் பிரதிநிதிகள், முக்கிய தேசிய பொது சுகாதாரத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர்.

 

வலுப்படுத்தப்பட்ட நோய்க் கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட தயார்நிலை, ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாடு முழுவதும் செயல்திறனைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகியவற்றின் மூலம், மேலும் சிறந்த ஒரு பொது சுகாதார அமைப்பைக் கட்டமைப்பதில் மத்திய அரசு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டு உறுதிப்பாட்டை இந்த தேசிய ஆய்வுக் கூட்டம் உறுதிப்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285708&reg=3&lang=1

(Release ID : 2285708)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2285956) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी