நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இ-விதான் செயலி அமலாக்கத்திற்கான முயற்சிகளை மகாராஷ்டிரா சட்டமன்றம் மேற்கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUL 2026 4:37PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரே நாடு, ஒரே செயலி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் முக்கிய நடவடிக்கையாக தேசிய இ-விதான் செயலி (நேவா) அமலாக்கத்திற்கான முயற்சிகளை மகாராஷ்டிரா சட்டமன்றம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், மகாராஷ்டிர சட்டமன்ற செயலகம் ஆகியவற்றுக்கு இடையேயான சந்திப்பு 16.07.2026 அன்று மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேவா இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருமான டாக்டர் சத்ய பிரகாஷ் மகாராஷ்டிரா அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி சுப்ரியா ஜிவ்ரே ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நேவா அமலாக்கத்திற்குத் தேவைப்படும் மென்பொருள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நிறுவனத் தயார் நிலை, நிதியுதவி, திறன் கட்டமைப்பு, பங்கு பெறும் முகமைகளின் பங்களிப்பு, பொறுப்பு ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற நடைமுறைகளை ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் மூலம் இணைப்பது இதன் நோக்கமாகும். ரூ.673.94 கோடி நிதி ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சட்டமன்ற நடவடிக்கைகளை காகிதமின்றி வெளிப்படையான முறையில் திறன்மிக்க வகையில், மின்னணு முறையை உறுப்பினர்கள் பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285772&reg=3&lang=1

****

TV/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285909) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi