சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயப் படிப்புக்கு திறன் அடிப்படையிலான பாடத்திட்டம் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
17 JUL 2026 5:32PM by PIB Chennai
நாட்டில் துணை சுகாதாரக் கல்வியின் தரம், சீரான தன்மையையும் உலகளாவிய போட்டித்திறனையும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய துணை சுகாதாரத் தொழில் முறை ஆணையமான என்சிஏஹெச்பி (NCAHP), 1 ஜூலை 2026 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப பட்டயப் படிப்பிற்கான (டிஎம்எல்டி - DMLT) திறன் அடிப்படையிலான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
தற்போது டிஎம்எல்டி திட்டத்தை வழங்கும் அல்லது வழங்கத் திட்டமிடும் அனைத்து நிறுவனங்களும், 2026–27-ம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 2027–28-ம் கல்வியாண்டு முதல் அதனை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இரண்டு வருட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பட்டயப் படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து இயற்பியல், வேதியியல், உயிரியலுடன் அறிவியல் பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டமானது, வழக்கமான அறிவு சார்ந்த கற்பித்தல் முறையிலிருந்து திறன் அடிப்படையிலான கல்வி முறைக்கு ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது, உயர்தர நோயறிதல் ஆய்வக சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள், விழுமியங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளது.
சுமூகமான செயலாக்கத்தை எளிதாக்குவதற்கும், இந்த மாற்றத்தின் போது நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆணையம், முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பிற தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285818®=3&lang=1
(Release ID : 2285818)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2285872)
வருகையாளர் எண்ணிக்கை : 44