தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
டிஜிட்டல் ஆளுகை மூலம் தொழிற்சங்கங்களுக்கு வலுவூட்டுதல்: சமாதான் தளம் 2.0 குறித்த விழிப்புணர்வு அமர்வு
प्रविष्टि तिथि:
17 JUL 2026 4:31PM by PIB Chennai
தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய தலைமை தொழிலாளர் ஆணையத்தின் தில்லி மண்டல அலுவலகம், புது தில்லியில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்காக சமாதன் தளம் 2.0 குறித்த ஒரு விரிவான விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.
புதுதில்லியின் மத்தியப் பகுதி துணைத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் திரு பி.எஸ். கர்மாசேவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தலைமையகத்தின் மத்திய துணைத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் திரு எஸ்.கே. சாஹு, நவீன தொழிலாளர் நிர்வாகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்திறனின் முக்கியப் பங்கையும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கையும் எடுத்துரைத்தார்.
இந்த அமர்வில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி), தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியூசி), ஹிந்த் மஸ்தூர் சபா (ஹெச்எம்எஸ்), பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்), இந்திய தொழிற்சங்கங்க மத்திய அமைப்பு (சிஐடியு), உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கலந்துரையாடல் கேள்வி-பதில் பகுதியில், பங்கேற்பாளர்கள் அதிகாரிகளுடன் உரையாடி, கேள்விகளை எழுப்பி, ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இணையதள பயன்பாடு உள்ளார்ந்த வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்திய பங்கேற்பாளர்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் முன்முயற்சியான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளைப் பாராட்டி, இது போன்ற விழிப்புணர்வு முயற்சிகளை வரவேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285769®=3&lang=1
(Release ID : 2285769)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2285868)
आगंतुक पटल : 10