புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளராக டாக்டர் ஸ்ரீநிவாச குமார் தும்மலா நியமிக்கப்பட்டுள்ளார்
प्रविष्टि तिथि:
16 JUL 2026 10:23PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் புதிய செயலாளராக சர்வதேச அளவில் பிரபலமான கடலியலாளரும் முன்னணி விஞ்ஞானியுமான டாக்டர் ஸ்ரீநிவாச குமார் தும்மலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் ஸ்ரீநிவாச குமார் பொறுப்பேற்கும் நாளிலிருந்து 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது முந்தையதோ அதுவரை இந்த பதவியை வகிப்பார்.
தொலை உணர்வு, கடற்கரையோர மாசுக்குறைப்பு, பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறந்த அனுபவம் பெற்றவர் டாக்டர் ஸ்ரீநிவாச குமார் தும்மலா. இவர் இந்தியாவின் சுனாமி முன்னெச்சரிக்கை உள்கட்டமைப்பை நிறுவிய சிற்பியாவார். இவரது முயற்சிகள் காரணமாக உலக அளவில் சுனாமி சேவை வழங்குவோர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. உலகத்தரத்திலான சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2010-ம் ஆண்டு தேசிய புவி அறிவியல் விருது வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285582®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2285691)
आगंतुक पटल : 6