தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 16 JUL 2026 2:13PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI), தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, கேரள மாநிலம் காசர்கோடு முழுவதும் 2026 மே மாதத்தில் நடத்தப்பட்ட மொபைல் நெட்வொர்க் தரச் சோதனையின் (IDT) முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க்கில் குரல், தரவு ஆகிய இரண்டின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பது இதன் நோக்கமாகும். இந்த சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம், செயல்திறன் போன்ற முக்கிய சேவைத் தர (QoS) அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்கிறது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்படுகின்றன.

காசர்கோடு மாவட்டத்தில் முக்கிய அளவுருக்களுக்கான ஒட்டுமொத்த மொபைல் நெட்வொர்க் செயல்திறன் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது:-

கவரேஜ் இடைவெளி - இது ஏர்டெல்லுக்கு 2105 /46617 , பிஎஸ்என்எல் -க்கு 3203 /46207 , ஆர்ஜேஐஎல்- க்கு 1252 /45532 மற்றும் விஐஎல்- க்கு 2105 /47035 ஆக இருந்தது.

துண்டிக்கப்பட்ட அழைப்புகள் - வெற்றிகரமாக இணைக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கையில், துண்டிக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை ஏர்டெல்லுக்கு 1/419 , பிஎஸ்என்எல் - க்கு 18/402 , ஆர்ஜேஐஎல் - க்கு 0/421, விஐஎல் - க்கு 1/421 ஆக இருந்தது.

விரிவான அறிக்கைகள் www.trai.gov.in என்ற டிராய் இணையதளத்தில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285310&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2285618) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी