வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தில்லி-என்.சி.ஆர். பகுதியில் வாகன மாசைக் குறைக்க 'பரிவர்த்தன்' திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2026 6:54PM by PIB Chennai
தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பகுதிகளில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 'பரிவர்த்தன்' திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, பழைய மற்றும் அதிக மாசு ஏற்படுத்தும் லாரிகள், பேருந்துகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக பி.எஸ்-6 தரம் கொண்ட வாகனங்கள் அல்லது மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக ரூ. 9,585 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இதனைச் செயல்படுத்தும்.
இத்திட்டத்தின் கீழ், வாகனக் கடன்களுக்கு 5 சதவீத வட்டி மானியம், வாகன வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு, வாகனத் தயாரிப்பாளர்கள் வழங்கும் 8 சதவீத தள்ளுபடி மற்றும் எரிபொருள் வவுச்சர்கள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் . தில்லி ஆகிய மாநிலங்கள் இதற்கான வரி விலக்குகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. 11 முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் இத்திட்டத்துடன் இணைந்துள்ளன.
ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் மூலம் இத்திட்டத்தின் பலன்கள் வெளிப்படையான முறையில் பயனாளிகளுக்குச் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது. தில்லி-என்.சி.ஆர். பகுதியில் தூய்மையான காற்றையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்குவதில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285463®=3&lang=1
****
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2285602)
வருகையாளர் எண்ணிக்கை : 42