ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2026: ஜவுளித்துறையில் உலகளாவிய வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மூன்றாம் நாள் நிகழ்வுகள்!
प्रविष्टि तिथि:
16 JUL 2026 6:50PM by PIB Chennai
பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சியின் மூன்றாம் நாள், ஜவுளித்துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்த மிக முக்கியமான விவாதங்களை முன்னெடுத்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வு, சுழற்சிப் பொருளாதாரம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வலியுறுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜவுளித் திறன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சிறப்பு அமர்வில் முதல்வர் பங்கேற்று, மாநிலத்தின் உற்பத்தித் திறனை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து, வேளாண் கழிவுகளில் இருந்து புதிய இழைகளை உருவாக்குதல், கரிம பருத்திச் சங்கிலியில் நியாயமான விலை நிர்ணயம் மற்றும் மறுசுழற்சி முறைகளைச் செயல்படுத்துவது குறித்து நிபுணர்கள் விவாதித்தனர்.
இந்திய ஜவுளி நிறுவனங்கள் மின்னணு வணிகம் வாயிலாக உலக சந்தையை அடைவது குறித்தும், கைத்தறிப் பாரம்பரியத்தை நவீன சந்தைகளுடன் இணைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய ஜவுளித்துறையை உருவாக்க, நிதி உதவி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடுஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வுகள் உறுதி செய்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285462®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2285578)
आगंतुक पटल : 6