ஊரக வளர்ச்சி அமைச்சகம்
6 கோடி லட்சாதபதி சகோதரிகள் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்கான இரண்டு நாள் பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
16 JUL 2026 6:12PM by PIB Chennai
"6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குதல்: உத்தி மற்றும் செயல் திட்டம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பிராந்தியப் பயிலரங்கம், கயாவில் உள்ள பீகார் பொது நிர்வாக, கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், ஏற்பாடு செய்யப்பட்டது. 6 கோடி லட்சாதிபதி சகோதரிகள் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, 2026-27-ம் நிதியாண்டிற்கான ஒரு விரிவான உத்தி, வருடாந்திர செயல் திட்டத்தை வகுப்பது இந்தப் பயிலரங்கத்தின் நோக்கமாகும்.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் திரு ரோஹித் கன்சல் இந்தக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், பங்கேற்பாளர்கள் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத வாழ்வாதாரங்கள், தொழில் ஊக்குவிப்பு, கிராமப்புறப் பெண்களின் வருமானத்தை உயர்த்துவதற்கான நீண்டகால உத்திகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285436®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285572)
आगंतुक पटल : 4