அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 16 இடங்களில் மேம்பட்ட சாலை உட்கட்டமைப்புத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தும் முதல் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 16 JUL 2026 6:12PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ), நாடு முழுவதும் உள்ள 16 நகரங்கள் மற்றும் இடங்களில் மேம்பட்ட உள்நாட்டுச் சாலை உட்கட்டமைப்புத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தும் முதல் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அத்துடன், தனது ஓராண்டு கால பவள விழாக் கொண்டாட்டங்களையும் (ஜூலை 16, 2026 – ஜூலை 16, 2027) இன்று அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. பல்வேறு உத்திசார் ஒத்துழைப்புகள் மூலம் சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ உருவாக்கிய புதுமையான, நீடித்த சாலை கட்டுமான தொழில்நுட்பங்களை நிரூபிப்பதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைகிறது.

அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அறிவியல் நிறுவனங்கள், தொழில்துறையினர், மாநில அரசுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொண்டாட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கு முன்பு, டாக்டர் ஜிதேந்திர சிங் தொழில்நுட்பக் கண்காட்சியைப் பார்வையிட்டு, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். சாலைப் பொறியியல், நடைபாதை தொழில்நுட்பங்கள், அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள், சாலைப் பாதுகாப்பு, நீடித்த கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றில் இந்த நிறுவனம் உருவாக்கிய பல்வேறு உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை அவர் ஆய்வு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285435&reg=3&lang=1

***

(Release ID: 2285435)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2285540) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी