பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'மால்வன்' ஜூலை 22 அன்று கடற்படையில் இணைகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2026 6:17PM by PIB Chennai

இந்திய கடற்படை தமது புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான மால்வனை ஜூலை 22 அன்று படையில் இணைக்கிறது. இவ்விழாவில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீஃப்  மார்ஷல் தலைமை தாங்குகிறார். மேற்குக் கடற்படைத் தளத்தின் தலைமை தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலை வகிக்க உள்ளார். கடற்படை உயர் அதிகாரிகள், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகள், முன்னாள் படை வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட மால்வன் கப்பல் நாட்டின் தற்சார்பு தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பலின் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டுமானத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285439&reg=3&lang=1     

****

SS/IR/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2285492) வருகையாளர் எண்ணிக்கை : 64
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , हिन्दी , Punjabi