மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயகத்தின் பள்ளிகளாகத் திகழும் சட்டப்பேரவைகளில், மக்கள் பிரதிநிதிகள் விவாதங்கள், ஒருமித்த கருத்துக்கள், சேவை மனப்பான்மை ஆகிய விழுமியங்களைக் கற்றுக்கொள்கின்றனர்: மக்களவைத் தலைவர்

प्रविष्टि तिथि: 15 JUL 2026 4:23PM by PIB Chennai

சட்டப்பேரவைகள் சட்டங்களை இயற்றும் அமைப்புகளாக மட்டுமின்றி, அவை விவாதம், ஒழுக்கம், ஒருமித்த கருத்து,  சேவை மனப்பான்மை போன்ற விழுமியங்களை மக்கள் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ளும் ஜனநாயகத்தின் பள்ளிகளாகத் திகழ்கின்றன என்று மக்களவைத் தலைவர்  திரு. ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளின் பங்கு, கடமைகளை வலியுறுத்திய அவர், மக்களுக்கான தங்களது பொறுப்புகளை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ஏனெனில், ஜனநாயகம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்  விதிகளால் மட்டுமின்றி, பொதுமக்களின் நம்பிக்கை, விவாதம், கண்ணியம், சேவை மனப்பான்மை போன்ற நடவடிக்கைகளால் நிலைநிறுத்தப்படுகிறது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் 75-வது ஆண்டு விழா நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில்,உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை தனது பொது வாழ்க்கையின் முதல் பள்ளி என்று கூறிய திரு. பிர்லா, அந்த அவையில் தாம் கற்றுக்கொண்ட ஜனநாயக விழுமியங்கள், அவை மரபுகள், சட்டமன்ற நடத்தை முறைகள் ஆகியவை, ஒரு மாணவர் ஆர்வலராகத் தொடங்கி சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், இறுதியாக மக்களவை சபாநாயகர் என்ற நிலையை அடைவதற்கான தனது பயணத்தை வடிவமைத்தன என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவைக்குள் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின் உண்மையான சாராம்சத்தை தான் கற்றுக்கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். அதாவது, கவனித்தலும், ஆரோக்கியமான விவாதமும், ஜனநாயக நடைமுறைகளை வளப்படுத்தி வரலாற்றை வடிவமைக்கின்றன என்றார். அதே வேளையில், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், அதன் மதிப்பை மட்டுமே குறைக்கின்றன. அவையில் நடைபெறும் ஒவ்வொரு விவாதமும், பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும், இறுதியில், ஜனநாயக வரலாற்றின் ஒரு நீடித்த பகுதியாக மாறுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284852&reg=3&lang=1

(Release ID: 2284852)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285165) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati