தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் எவரும் பின்தங்கிவிடாமல் இருப்பது உறுதி செய்யப்படும்: மத்திய அமனுச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 15 JUL 2026 5:29PM by PIB Chennai

பிரிக்ஸ் அமைப்பின் இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ், பிரிக்ஸ் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தூதுக்குழுத் தலைவர்கள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், தொழிலாளர், பணியமர்த்துவோர் அமைப்புகள், அறிவுசார் கூட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து, பணியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது. சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் சந்தையை முறைப்படுத்துதல், பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பு, திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன் கொண்ட தொழிலாளர் சந்தைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்துள்ள தூதுக்குழுக்களை வரவேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் தலைமைத்தும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படுவதாகவும், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை,  மனிதநேயமே முதன்மையானது என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், நவம்பர் 2025-ல் காலாவதியான 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு நவீன தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக இந்தியா மாற்றியமைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்காகத் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட  சூழல் அமைப்பை உருவாக்கும் ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.

பதிவுசெய்யப்பட்ட 31.7 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தனித்துவ அடையாளம், தரவு நகல் நீக்கம், நலத்திட்ட உதவிகளைத் தடையின்றிப் பெறுதல் ஆகியவற்றை 'இ-ஷ்ரம்'  இணையதளம் சாத்தியமாக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

'தேசிய பணி வாய்ப்பு சேவை' இணையதளம் வேலைவாய்ப்புப் பொருத்தம், திறன் மேம்பாடு, ஆலோசனை ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் தளங்களின் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வடிவமைப்பு, தொழிலாளர்களுக்கான தளம் போன்ற புதிய வகை தொழிலாளர்களுக்கும் சேவைகளை விரைவாக விரிவுபடுத்த அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார். மொரிஷியஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இந்தியா இந்தத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284962&reg=3&lang=1

(Release ID: 2284962)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285108) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati