ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஐரோப்பிய யூனியனுடனான ஜவுளித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUL 2026 4:34PM by PIB Chennai

பாரத் டெக்ஸ் டிரேட் ஃபெடரேஷன், பிரீமியர் விஷன் ஆகிய அமைப்புகள், இந்தியா- ஐரோப்பிய யூனியன்  இடையே ஜவுளி, ஆடை வர்த்தகத்தை வலுப்படுத்த ஏதுவான நல்லுறவுகளை உருவாக்குகின்றன.

இது இந்திய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ஆடை  வடிவமைப்பாளர்கள் உலகளவில், தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது உலகளவில், வர்த்தக முத்திரைகள், வாங்குபவர்கள்,  ஃபேஷன் நிறுவனங்கள் இந்தியாவின் பன்முக, போட்டி நிறைந்த ஜவுளிச் சூழலுடன், மேலும் வலுவாக ஈடுபட உதவிடும்.

இந்த ஒத்துழைப்பு, ஜவுளி விநியோகத்தில் புத்தாக்கம், நிலைத்தன்மை, வடிவமைப்புச் சிறப்பு, வர்த்தக நிலை குறித்த நுண்ணறிவு, உலகளவிலான கொள்முதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.

பிரீமியர் விஷன் எஸ்.ஏ. நிறுவனத்தின் ஃபேஷன் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஃப்ளோரன்ஸ் ரூசன்,  பாரத் டெக்ஸ் டிரேட் ஃபெடரேஷன் தலைவர் திரு நரேன் கோயங்கா ஆகியோர் இதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், பாரத் டெக்ஸ் அமைப்பை ஒரு சர்வதேசத் தளமாக நிலைநிறுத்துவதில், இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று கூறினார். இது இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள், முதல் ஏற்றுமதியாளர்கள்,  உற்பத்தியாளர்கள் முன்னணி ஐரோப்பிய வாங்குபவர்களுடன் இணைவதற்கு உதவும் என்றார். அதே நேரத்தில், நம்பகமான, புதுமையான, நிலையான கொள்முதல் இடமாக இந்தியாவின் வலிமையையும் இது வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பாரத் டெக்ஸ் வர்த்தகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வாங்குவோர், கொள்முதல் நிறுவனங்கள், மூலப்பொருள் ஆலோசகர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஜவுளித்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284875&reg=3&lang=1

(Release ID: 2284875)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2285063) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada