மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறையில் சுமார் 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 15 JUL 2026 3:40PM by PIB Chennai

நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியா, உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாகி வருவதைப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் ஒசூரில் உள்ள முன்னணி மின்னணுப் பொருட்கள் உற்பத்தி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஸ்மார்ட் போன்கள், மின்னணு உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். உற்பத்தி சார்ந்த வளர்ச்சி, தரமான வேலைவாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதையும் என்பதையும் உலக அளவில் இந்தியாவின் நிலையை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதையும் பிரதிபலிக்கிறது.

நாட்டில் உள்ள முக்கிய உற்பத்தி நிலையங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.  பல்வேறு முன்னணி மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் பெருமளவில் பெண்கள் பணியாற்றுகின்றனர்.

நாட்டின் முன்னணி மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று இந்தத் துறையில் அதிக அளவில் பெண்களுக்கு வேலை வழங்கும்  நிறுவனமாக உருவெடுத்துள்ளது.  அந்த நிறுவனத்தின் 3 முக்கிய உற்பத்திப் பிரிவுகளில் சுமார் 65 சதவீத பெண் பணியாளர்களுடன் சுமார் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மின்னணு உற்பத்திப் பொருட்கள் துறை சுமார் 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் மொபைல் உற்பத்தித் துறையில் மட்டும் 12 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதில் நேரடி வேலைவாய்ப்பில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் ஓசூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரூவில் உள்ள மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284808&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2285055) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada