புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை குறித்த ஆய்வின் மாதாந்திர அறிக்கை வெளியீடு

प्रविष्टि तिथि: 15 JUL 2026 4:00PM by PIB Chennai

மத்திய புள்ளியியல்திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அமைப்பால் மேற்கொள்ளப்படும் காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை  குறித்த ஆய்வுமக்கள் தொகையின் செயல்பாடுகளில் பங்கேற்புவேலைவாய்ப்பு/வேலையின்மை போன்ற நிலை  குறித்த தரவுகளுக்கான முதன்மை ஆதாரமாகும். நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை தொடர்பான குறியீடுகளுக்கான மாதாந்திரகாலாண்டு மதிப்பீடுகளை வழங்கும் வகையில்ஜனவரி 2025 முதல் இந்த ஆய்வு முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு முடிவுகள் மாதாந்திர அறிக்கைகளாக வெளியிடப்படுகின்றன. இவை 'நடப்பு வாராந்திர நிலைஅடிப்படையைப் பின்பற்றிஅகில இந்திய அளவில் முக்கிய தொழிலாளர் சந்தை குறியீடுகளான தொழிலாளர்  பங்கேற்பு விகிதம்தொழிலாளி-மக்கள் தொகை விகிதம்,  வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆகியவற்றின் மதிப்பீடுகளை வழங்குகின்றன.

ஏப்ரல் 2025 முதல் மே 2026 வரையிலான காலத்திற்கான மாதாந்திர அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜூன் 2026-க்கான அறிக்கை இத்தொடரின் பதினைந்தாவது அறிக்கையாகும்.

ஜூன் 2026-ல் ஒட்டுமொத்த காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை குறித்த ஆய்வில், 15 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 54.4% ஆகப் பதிவாகியுள்ளது. இது மே 2026-ல் இருந்த நிலையிலேயே நீடிக்கிறது. ஜூன் 2025-ல் பதிவான 54.2%-ஐ விடச் சற்று அதிகமாகும்.

ஜூன் 2026-ல் பெண்களுக்கான காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை (15 வயதுக்கு மேற்பட்டோர்) 32.7% ஆக இருந்தது (மே 2026-ல் இது 32.8% ஆக இருந்தது)இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இருந்த அளவை (32.0%) விட 0.7 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284814&reg=3&lang=1

 

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2285050) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी