திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தர உத்தரவாதத்தை வலுப்படுத்துவதற்கான விருப்பக் கடிதத்தில் தொழிற்கல்வி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் - ஆஸ்திரேலிய திறன் தரநிலை ஆணையம் கையெழுத்திட்டுள்ளன

प्रविष्टि तिथि: 15 JUL 2026 5:22PM by PIB Chennai

ஆஸ்திரேலியாவில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் முக்கிய விளைவாக, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிற்கல்வி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில்- ஆஸ்திரேலிய திறன் தர ஆணையம் ஆகியவை, தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சியின் ஒழுங்குமுறை தர உத்தரவாதத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு விருப்பக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம், இரு நாடுகளின் தேசிய தர உத்தரவாத அமைப்புகளுக்கு இடையே நிறுவன ரீதியான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், தொழிற்கல்வி,  பயிற்சியில் வலுவான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா -ஆஸ்திரேலியா நாடுகளின் ஒருங்கிணைந்த  அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தொழிற்கல்வி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தலைவர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி, இவ்விரு அமைப்புக்களுக்கும் இடையயேயான ஒத்துழைப்பு, தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு கொண்ட இரண்டு தேசிய தர உத்தரவாத அமைப்புகளை ஒன்றிணைக்கிறது என்றார். இந்த ஒத்துழைப்பின் மூலம், அறிவுப் பரிமாற்றம், ஒழுங்குமுறை நடைமுறைகளை வலுப்படுத்துதல், நிறுவனத் திறன்களை வளர்த்தல், புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284945&reg=3&lang=1

(Release ID: 2284945)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2285026) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी