பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஞ்சியில் ராணுவ பல்பொருள் அங்காடி (கேன்டீன்) சேவைகள்: மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஆய்வு

प्रविष्टि तिथि: 14 JUL 2026 6:25PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையில் ராணுவ கேண்டீன் (பல்பொருள் அங்காடி) கட்டுப்பாட்டு வாரியத்தின் 80-வது கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பணியில் உள்ள ராணுவத்தினர், ஓய்வு பெற்ற வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கேண்டீன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பல்பொருள் அங்காடி உள்கட்டமைப்புக்கான நிதி ஆதாரங்களை அதிகரித்தல், கிடங்குகளை நவீனப்படுத்துதல், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை நீட்டிப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

பிரதமா் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் உள்நாட்டுப் பொருட்களை ராணுவ கேண்டீன் விநியோக முறையில் அறிமுகப்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். இதன் மூலம் கைவினைக்கலைஞர்கள், பழங்குடியின சமூகங்கள், விவசாயிகளுக்குப் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான உதவி உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நவீனமயமாக்கலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்கர் கிடங்கையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284568&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2284666) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी