வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2026 ஜூன் மாதத்திற்கான மொத்த விலைக்குறியீடு உள்ளிட்டவற்றின் தற்காலிக மதிப்பீடுகள், 2026, ஏப்ரல் மாதத்திற்கான இறுதி மதிப்பீடுகள் வெளியீடு
प्रविष्टि तिथि:
14 JUL 2026 12:00PM by PIB Chennai
2026 ஜூன் மாதத்திற்கான அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம், கடந்த ஆண்டு அடிப்படையில் 9.87 சதவீதமாக உள்ளது. இது 2026, மே மாதத்தில் 9.68 சதவீதமாக இருந்தது. அனைத்துப் பொருட்களுக்கான குறியீடு ஜூன் 2026-ல் 110.2 ஆக உள்ளது, அதேசமயம் மே 2026-ல் இது 109.9 ஆக இருந்தது.
சென்ற ஆண்டு அடிப்படையில் மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் பணவீக்க விகிதங்கள், மே 2026-ல் முறையே 4.99 சதவீதம், 30.33 சதவீதம், 7.48 சதவீதம் என இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், ஜூன் 2026-ல் பணவீக்க விகிதங்கள் முறையே 7.0 சதவீதம், 27.41 சதவீதம், 7.48 சதவீதம் என உள்ளன. மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம், மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் குறியீடுகள் ஜூன் 2026-ல் முறையே 116.1, 111.1, மற்றும் 107.8 ஆக உள்ளன. அதேசமயம், மே 2026-ல் அவை முறையே 113.7, 113, மற்றும் 107.8 ஆக இருந்தன.
2026, ஜூன் மாதத்திற்கான உத்தேச இடுபொருள் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2022-23) தற்காலிக மதிப்பீடுகள்
2026, ஜூன் மாதத்தில் உற்பத்தித் துறைக்கான அகில இந்திய உத்தேச இடுபொருள் உற்பத்தியாளர் குறியீடு 107.1 ஆக உள்ளது (தற்காலிக மதிப்பீடு).
2026 ஏப்ரல் மாதத்திற்கு உற்பத்தித் துறைக்கான உத்தேச இடுபொருள் உற்பத்தியாளர் விலைக் குறியீடு, 104.9 (தற்காலிக மதிப்பீடு) என்பதிலிருந்து 104.2 (இறுதி மதிப்பீடு) எனத் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284374®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2284602)
आगंतुक पटल : 10