சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை, பெரியார் நகர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் 2026, ஜூலை 16 அன்று திறந்துவைக்கிறார்
प्रविष्टि तिथि:
14 JUL 2026 5:38PM by PIB Chennai
சென்னை பெரியார் நகர் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் 2026 ஜூலை 16 அன்று திறக்கப்படுகிறது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்து வைப்பார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வட சென்னையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இது சென்னை மண்டலத்தில்14-வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமாகும். இதன் மூலம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் என்ற இலக்கு நிறைவேறுகிறது.
இந்தத் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படுவதால் வட சென்னை மக்களவைத் தொகுதியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிபோர்க்கு பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகள் எளிதில் கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் பயண நேரம் கணிசமாகக் குறையும்.
தொடக்கத்தில், நாளொன்றுக்கு சுமார் 40 விண்ணப்பங்களை ஏற்கும் இந்தப் பாஸ்போர்ட் சேவை மையத்தின் செயல்திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நாளொன்றுக்கு 90 விண்ணப்பங்கள் வரை ஏற்கும் நிலை உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணைய தளம், பாஸ்போர்ட் சேவா செல்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதிய அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத் திறப்பு என்பது குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை முன்னெடுப்பதில் வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும், திறமையான, எளிதில் அணுகக்கூடிய, வெளிப்படையான பாஸ்போர்ட் சேவைகளை மக்களுக்கு மிக அருகில் வழங்கும் அதன் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284524®=3&lang=1
***
SS/SMB/SH
(रिलीज़ आईडी: 2284552)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English