தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை 70-ல் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் ஆய்வு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUL 2026 2:09PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஜெய்ப்பூர் மண்டல அலுவலகம், ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை 70-ல் முனாபாவ் முதல் தனோட் வரையிலான பகுதியில் கடந்த ஜூன் மாதம் சுமார் 311.4 கிலோமீட்டர் தூரத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டு மொபைல் நெட்வொர்க் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் குரல் அழைப்பு, தரவு சேவை, சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு, பதிவிறக்க, பதிவேற்ற வேகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

மொபைல் பயனர்களின் விழிப்புணர்வுக்காகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சேவையை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் பகுதிகளில் உள்ள நெட்வொர்க் நிலவரங்களை இதன் மூலம் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது குறித்த முழுமையான அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284415&reg=3&lang=1

 

***

SS/PD/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2284492) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी