சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUL 2026 7:46PM by PIB Chennai

 

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம், சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து, நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூலை 13, 2026 அன்று சென்னை சௌகார்பேட்டையில் உள்ள தேராபந்த் பவனில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சில்லறை & மொத்த நகை வியாபாரிகள், வர்த்தக பிரதிநிதிகள், சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிஐஎஸ் ஹால்மார்க்கிங் தேவைகள், சட்டப்பூர்வ விதிமுறைகள், ஒழுங்முறைகளை முறையாகப் பின்பற்றுதல், நுகர்வோர் பாதுகாப்பு அம்சங்கள், தங்கம் & வெள்ளி நகைகள், கலைப்பொருட்களுக்கான ஹால்மார்க்கிங் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நகை வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், ஹால்மார்க்கிங் நடைமுறை, பதிவு செயல்முறைகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் தொடர்பாக நகை வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் தளமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த நகை வியாபாரிகள் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்ச்சி, சென்னையில் ஹால்மார்க்கிங் சூழலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. மேலும், பொதுமக்களும் தொழில் துறையினரும் பிஐஎஸ் கேர் செயலி, பிஐஎஸ் இணையதளம் அல்லது சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள், ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் இடம்பெற்றுள்ள கியூஆர் குறியீடுகளை பயன்படுத்தி, பொருந்தும் இடங்களில், ஹால்மார்க் பதிவுகள், ஐஎஸ்ஐ முத்திரை உரிமங்கள், கட்டாயப் பதிவுத் திட்டம் (சிஆர்எஸ்) தொடர்பான பதிவுகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளுமாறும் பிஐஎஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

****

SS/PD/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2284442) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English