வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பீடு

प्रविष्टि तिथि: 13 JUL 2026 4:16PM by PIB Chennai

ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025-டன் ஒப்பிடுகையில் 9.48 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. ஜூன் 2026-க்கான மொத்த இறக்குமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 88.76 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025 உடன் ஒப்பிடுகையில் 26.85 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது.

2026-27-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 232.73 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 11.37 சதவீத நேர்மறை வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 270.15 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 17.55 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

ஜூன் 2025-ல் 34.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதி, ஜூன் 2026-ல் 40.41 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

ஜூன் 2025-ல் 54.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு இறக்குமதி, ஜூன் 2026-ல் 70.84 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 111.57 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதி, 2026-27 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 129.32 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

2025-26 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 180.31 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு இறக்குமதி, 2026-27 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 216.18 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284139&reg=3&lang=1   

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2284304) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati