மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மின்னணு அச்சுறுத்தல் அறிக்கை 2025-26-ன் 2-வது பதிப்பு வெளியிடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUL 2026 1:59PM by PIB Chennai

வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு, கட்டணச்சூழல்களுக்கான மின்னணு அச்சுறுத்தல் அறிக்கை 2025-26-ன் 2-வது பதிப்பை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டது. வங்கி, நிதிச்சேவைகள், காப்பீடு, டிஜிட்டல் கட்டணச் சேவைகள் ஆகியவற்றின் மாறிவரும் அச்சுறுத்தல்களின் விரிவான மதிப்பீடு குறித்து  நிதிநிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், இணைய பாதுகாப்புத்துறை தலைவர்கள் ஆகியோருக்கு இந்த அறிக்கை அளிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பச் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், இணையவழி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், மின்னணு வாயிலான நம்பிக்கையை வலுப்படுத்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே நம்பகமான கூட்டாண்மை அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284051&reg=3&lang=1  

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2284240) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी