வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய பொதுப்பணித் துறையின் 172-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 8:11PM by PIB Chennai
மத்திய பொதுப்பணித் துறையின், 172-வது ஆண்டு விழா, 2026 ஜூலை 12 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் கதிகித்தலா முன்னிலையில், துறையின் அமைச்சர் திரு மனோகர் லால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறையின் டிஜிட்டல் மாற்றம், வெளிப்படைத்தன்மை, திறமையான திட்ட மேலாண்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தொழில்நுட்ப வெளியீடுகள், 'நிர்மாண் பாரதி' (பொதுப் பணித்துறையின் வருடாந்திர உள்-வெளியீடு) உள்ளிட்ட துறையின் பல்வேறு முக்கிய வெளியீடுகள், டிஜிட்டல் முன்முயற்சிகளை அமைச்சர் வெளியிட்டார். மேலும், இந்தியாவின் குறிப்பிடத்தக்க நகர்ப்புற வளர்ச்சிப் பயணத்தையும், நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் முன்முயற்சிகளையும் எடுத்துரைக்கும் வகையில், இந்தியாவின் நகர்ப்புற மாற்றம்: கொள்கை மற்றும் நடைமுறையின் பிரதிபலிப்புகள் என்ற புத்தகத்தையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இந்தியாவின் நகர்ப்புற உத்வேகம்: நமது நகரங்களை வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக மாற்றுவதை நோக்கிய முயற்சி என்ற சிறப்புப் புத்தகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த கட்டுமான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது, நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது, திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவது, டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். தேசத்தைக் கட்டமைப்பதில் பொதுப்பணித் துறையின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், வெளிப்படைத்தன்மை, செயல்திறன், திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும், திறமையான, வெளிப்படையான இணையவழிப் பரிமாற்றம், பதிவு முறை, தொடர்ச்சியான நிறுவன சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்புத் துறையில் எதிர்கால சவால்களைத் திறம்பட எதிர்கொள்ளத் துறையைத் தயார்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283935®=3&lang=1
***
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2284105)
आगंतुक पटल : 5