அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட்-டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐந்து பேரும் தங்கம் வென்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2026 5:37PM by PIB Chennai

கொலம்பியாவின் புகாரமங்காவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO) 2026 போட்டியில், இந்திய அணியின் ஐந்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கங்களை வென்று, அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தி, இந்தியாவின் இளம் இயற்பியலாளர்கள் நாட்டிற்கு அளவற்ற பெருமையைச் சேர்த்துள்ளனர்.

இதில், 87 நாடுகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர். இது சர்வதேச அளவில் அறிவியல் கல்விச் சிறப்பில் நாட்டின் வளர்ந்து வரும் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பதக்கம் வென்ற இந்தியர்கள்:

1) கனிஷ்க் ஜெயின் - புனே, மகாராஷ்டிரா                   

2) ரித்தேஷ் அனந்த் பெண்டேல் - இந்தூர், மத்திய பிரதேசம்

3) ரிஷித் கார்க் - துவாரகா, புது தில்லி

4) ஷ்ரேஷ் சுரையா - மும்பை, மகாராஷ்டிரா

5) ஸ்வரித் ஜோஷி - அகமதாபாத், குஜராத்

இந்த குறிப்பிடத்தக்க சாதனையாகும்.  சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்தியாவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இது மேலும் விரிவுபடுத்துகிறது.

இந்தச் சாதனை, அணுசக்தித் துறையின் கீழ் உதவி பெறும் நிறுவனமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின்தேசிய மையமான ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தால் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் ஒலிம்பியாட் திட்டத்தின் வலிமையைப் பிரதிபலிக்கிறது. 

அணுசக்தித் துறைச் செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி, பதக்கம் வென்றவர்களை வாழ்த்தி, நமது இளம் இயற்பியலாளர்களின் இந்த மகத்தான சாதனை நாட்டிற்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283891&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2283907) வருகையாளர் எண்ணிக்கை : 68
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Telugu