அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், முதலாவது சாலையோர உணவு மையம் ஜம்மு - கஷ்மீரில் அமைய உள்ளது

प्रविष्टि तिथि: 11 JUL 2026 5:38PM by PIB Chennai

ஜம்மு-கஷ்மீரின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கத்வா மாவட்டத்தில் உள்ள லக்கன்பூரில், சாலையோர உணவு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்ப துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவித்தார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் நகரங்களின் பட்டியலில் லக்கன்பூர் இடம் பெற்றிருப்பது, இந்த யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு, சுற்றுலா,  வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார். தற்போது நடைபெற்று வரும் அமர்நாத்  யாத்திரையில், யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், இந்த ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். லக்கன்பூர் வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் செல்லும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், பிற பயணிகளுக்கான சேவைகளை இந்த புதிய வசதி மேலும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவை விரைவுபடுத்தி, நாட்டின் முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலையோர  உணவு மையங்களின் பட்டியலில், லக்கன்பூரைச் சேர்த்ததற்காக, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கும் டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார். உதம்பூர் மக்கள், குறிப்பாக உள்ளூர் சாலையோர வியாபாரிகள்,சிறு தொழில்முனைவோர் இத்திட்டத்தின் மூலம் பயனடையும் வகையில், விரைவான ஒப்புதலைப் பெறத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பிரதமர் திரு  நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமைக்கு இந்த முடிவு மற்றொரு உதாரணம் என்றும் அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283682&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2283701) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी