உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் நிறுவனங்கள் கடனுதவிப் பெற்று வரலாற்றுச் சாதனை - மத்திய அமைச்சர் திரு சிராக் பஸ்வான் பாராட்டு

प्रविष्टि तिथि: 11 JUL 2026 2:34PM by PIB Chennai

பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்துதல்  திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்குக் கடன் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில்,  மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு. சிராக் பஸ்வான் தலைமையில், புது தில்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

2 லட்சம் நிறுவனங்களுக்கு கடனுதவி பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இத்திட்டம் ரூ. 20,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளில், 90 சதவீதம் பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும், 44 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோராகவும் உள்ளனர். மேலும், இத்திட்டத்தின் கீழ், 75,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உதயம் ஆதார், உதயம் அசிஸ்ட், எப்எஸ்எஸ்ஏஐ, ஜிஎஸ்டி போன்ற பதிவுகள் மூலம், முறைசார் பொருளாதார நடைமுறைகளில் இணைந்துள்ளன. இத்திட்டம், 11 லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், இத்திட்டத்தில் இணைந்துள்ள பிற  அமைச்சகங்கள், வங்கிகள், மேம்பாட்டுக் கூட்டமைப்பினர், தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. சிராக் பாஸ்வான், இரண்டு லட்சம் பயனாளிகள் என்ற இந்தச் சாதனை, நாடு முழுவதும் அளவிடக்கூடிய விளைவுகளாக மாறிவருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார். மேலும், இத்திட்டத்தின் மொத்தப் பயனாளிகளில்  44 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர்கள் என்பது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் உண்மையான சாராம்சம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.

பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு,  மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட முன்னணி மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு  அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். எனவே, இந்த குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடுவதற்கான நிகழ்வாக இருப்பதுடன், இது இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியை அடுத்த நிலையை அடைவதற்கான வலுவான அடித்தளமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "ஒரு தேசியக் கொள்கையை தொழில் மேம்பாட்டிற்கான ஒரு இயக்கமாக" மாற்றியமைத்ததற்காக மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் களப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இத்திட்டத்தின் தொடக்க மூலதன ஆதரவின் கீழ் 4.18 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளதையும், 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சகத்தின் 80 பொதுவான முதலீட்டு மையங்களின் வலையமைப்பில், 32 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதையும், அமைச்சர் எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1.76 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களில் 77 சதவீதம் பேர் பெண்கள் என்றும் திரு சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் சாதனைகளை விளக்கும் வகையில், முக்கிய வெளியீடுகளை வெளியிடுதல், தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தாக்கத்தை வெளிப்படுத்தும் நிறுவனங்களைச் சேர்ந்த திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடல் போன்றவை இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283606&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2283646) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी