சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தென்னிந்தியாவில் வாழ்நாள் கற்றலில் சிறந்து விளங்கும் 1,800-க்கும் மேற்பட்ட என்பிடெல் நட்சத்திரங்களை சென்னை ஐஐடி கவுரவித்துள்ளது

प्रविष्टि तिथि: 11 JUL 2026 8:05AM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் 2026 ஜூலை 10 அன்று நடைபெற்ற என்பிடெல் ஸ்டார்ஸ் நிகழ்வில் தென்னிந்தியாவில் கற்றலில் சிறந்த 1,842 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய ‘மூக்’ திட்டங்களில் ஒன்றான ‘தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்’ (என்பிடெல்) மூலமாக, தொடர் கற்றலில் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்களை இக்கல்வி நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்கள் தொடர்ச்சியான கல்வித் திறனை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து என்பிடெல் படிப்புகளையும் வெற்றிகரமாக முடித்துச் சான்றிதழ்களைப் பெற்றவர்கள் என்பிடெல் ஸ்டார்ஸ் என்றழைக்கப்படுகிறார்கள். தற்போது மாணவர்கள், பணிபுரியும் வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கற்றலில் சிறந்து விளங்கி சான்றிதழ்களைப் பெறுவதுடன், தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் விரும்புகின்றனர்.

நாடு முழுவதும் கற்போருக்கு மிகக் குறைந்த செலவில் ஐஐடி தரத்திலான படிப்புகளைக் கிடைக்கச் செய்து, அனைவருக்கும் உயர்தரமான கல்வி சென்றடைய என்பிடெல் முக்கிய பங்காற்றியுள்ளது.

2026 ஜனவரி-ஏப்ரல் செமஸ்டரில் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 10,763 என்பிடெல் ஸ்டார்ஸ்களில், தெற்கு மண்டலத்தில் மட்டும் 1,842 பேர் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி டீன் (பாடமுறை) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் பேசுகையில், “என்பிடெல்-லின் உண்மையான வெற்றி, லட்சக்கணக்கான மாணவர் சேர்க்கையைக் கொண்டு மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக படிப்புகள் மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்திருக்கிறது என்பதை கொண்டுதான் அளவிடப்படுகிறது என்றார். தொடக்கத்திலிருந்தே, தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதை ஐஐடி என்பிடெல் நோக்கமாகக் கொண்டுள்ளது. வாய்ப்புகள் எப்போது எளிதாகக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் திறமை குவிந்திருக்கும் என்பதற்கு என்பிடெல் ஸ்டார்ஸ்களே உதாரணமாகத் திகழ்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.

***

TV/RJ


(रिलीज़ आईडी: 2283532) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English