தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் கிராமப்புற வளர்ச்சிக்காக பாரத்நெட் திட்டத்தை வலுப்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 10 JUL 2026 8:16PM by PIB Chennai

குஜராத் மாநிலம் முழுவதும் கிராமப்புற இணையதள உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் 'டிஜிட்டல் பாரத் நிதி', குஜராத் அரசு மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட 'பாரத்நெட்' திட்டத்தை குஜராத்தில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள சுமார் 14,287 கிராம ஊராட்சிகளில் அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது. இதில் குறிப்பாக, ஏற்கனவே உள்ள 14,264 கிராம ஊராட்சிகளில் இணைய கட்டமைப்பை, தடையின்றி இயங்கும் வகையில் 'ரிங் டோபாலஜி' முறைக்கு மேம்படுத்தவும், புதிதாக உருவாக்கப்பட்ட 23 கிராம ஊராட்சிகளில் இணைய வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் இடங்களில் 3,895 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படும்.

 

இதற்காக இந்திய அரசு சுமார் ரூ. 5,629 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் குஜராத்தின் கிராமப்புறங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு அதிவேக இணைய இணைப்பு கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283455&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2283455

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2283507) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी