சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
விளையாட்டு வீரர்களின் உடல் நலன் பராமரிப்பை மேம்படுத்த சஃப்தர்ஜங் மருத்துவமனையின் விளையாட்டு காயங்கள் மையம்-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 6:43PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் விளையாட்டு காயங்கள் மையம், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இடையே விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளித்தல், பராமரிப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய தடகள வீரர்கள், அவர்களுக்குத் உதவியாக இருக்கும் பணியாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதே இந்த கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும். விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல், காயங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், பராமரிப்பு, விளையாட்டு அறிவியலுக்கான ஆதரவு ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்த இக்கூட்டாண்மை வழிவகுக்கும். இத்துறையில் உள்நாட்டு ஆராய்ச்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளில் விளையாட்டுத்துறை சார்ந்த மருத்துவ வசதிகளை உருவாக்கவும், தடகள வீரர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த நீண்டகாலக் கூட்டாண்மை ஒரு தொடக்கமாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283405®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2283459)
आगंतुक पटल : 10