ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மழைநீரைச் சேகரிப்போம் இயக்கத்தில் முன்மாதிரியாகத் திகழும் சத்தீஸ்கரின் பலோட் மாவட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUL 2026 2:21PM by PIB Chennai

மழைநீரைச் சேகரிப்போம் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பிற்கு இணங்கசத்தீஸ்கர் மாநிலத்தின் பலோட் மாவட்டம் மக்கள் பங்களிப்புடன் கூடிய நீர் சேமிப்பு 2.0 திட்டத்தின் கீழ் சமூக அடிப்படையிலான தண்ணீர் பாதுகாப்பிற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. கிராம ஊராட்சிகள்உள்ளூர் மக்கள்மாவட்ட நிர்வாகத்தின் தீவிரப் பங்களிப்புடன் பலோட் மாவட்டம் பல்வேறு மழைநீர் சேகரிப்புநிலத்தடி நீர் அளவை அதிகரித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் நடப்பாண்டு மே வரையிலான காலகட்டத்தில் இந்த மாவட்டம் 2,84,917 நீர் பாதுகாப்புசெறிவூட்டல் கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரைச் சேமிக்கும் திறனை அதிகரித்துள்ளது. குறிப்பாகதடுப்பணைகள்நீர் உறிஞ்சு குழிகள்மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட 6,250-க்கும் மேற்பட்ட நீர் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் பங்களிப்பு முன்முயற்சி மூலம் கூடுதலாக 6.5 கோடி லிட்டர் மழைநீரைச் சேமிப்பதோடுநிலத்தடி நீர்மட்டமும் 5 முதல் 10 அடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283262&reg=3&lang=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2283388) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी