தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவில் செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் புகார்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இணையவழியில் விசாரணை நடத்தியது
प्रविष्टि तिथि:
10 JUL 2026 12:53PM by PIB Chennai
ஹரியானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பான 86 புகார்கள் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் இணையவழியாக விசாரணை மேற்கொண்டது. இந்த உயர்நிலை இணையவழி விசாரணைக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் திரு அனுராக் ரஸ்தோகி, தொழிலாளர் நல ஆணையர் திரு விஜய்குமார் பவிகட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, கொத்தடிமை தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களைக் கண்காணிப்பதற்கு, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களுடன், உதவி எண்களைத் தொடங்குவதன் அவசியத்தையும் நீதிபதி ராமசுப்பிரமணியன் வலியுறுத்தினார். மேலும், கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டு மீட்பதற்கான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு கொத்தடிமை தொழிலாளர்கள் விவகாரங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283226®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2283350)
आगंतुक पटल : 4