வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் அபரிமிதமான வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயுமாறு முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அழைப்பு

प्रविष्टि तिथि: 09 JUL 2026 8:07PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, இன்று நடைபெற்ற ‘இலக்கு  திரிபுரா வர்த்தக உச்சிமாநாடு 2026' நிகழ்வில் காணொலி வாயிலாக உரையாற்றினார். வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீட்டிற்கு மிகவும் உகந்த இடங்களுள் ஒன்றாகத் திரிபுராவைக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்குமாறு தொழில் துறைத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட  தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியாவை  நோக்கிய பயணத்தில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின் உந்துசக்தியாக உருவெடுத்து, அதில் முக்கியப் பங்காற்றவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமரின் மாற்றத்தை ஏற்படுத்தும் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, இந்தப் பிராந்தியத்தை இந்தியாவின் எல்லைப் பகுதியாக இருந்த நிலையிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கான நுழைவாயிலாக மாற்றியமைத்துள்ளதாகவும், இதன் மூலம் வர்த்தகம், முதலீடு மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

"முதலீடு என்பது நம்பிக்கையையும், நம்பிக்கை என்பது உள்கட்டமைப்பையும், உள்கட்டமைப்பு என்பது தொலைநோக்குப் பார்வையையும் அடிப்படையாகக் கொண்டவை" என்று வலியுறுத்திய திரு சிந்தியா, மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள், நவீன உள்கட்டமைப்பு மற்றும் வலுவான நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவற்றின் மூலம் கடந்த தசாப்தத்தில் வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிச் சூழலை மத்திய அரசு அடிப்படையிலேயே மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

 

தங்கள் முன் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு முதலீட்டாளர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக இருந்த திரிபுரா, வங்காள விரிகுடாவிற்கான நுழைவாயிலாக மாறியிருப்பது, பிரதமரின் தலைமையின் கீழ் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார். இந்தப் பகுதியின் மீதான மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை வழிநடத்த 'அஷ்டலட்சுமி' மாநிலங்கள் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283036&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2283090) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese