வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
காலணி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு சலுகை: கால அவகாசம் நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
09 JUL 2026 7:38PM by PIB Chennai
இந்தியாவில் காலணி உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், தொழில்துறையினர் வணிகம் செய்வதை எளிதாக்கவும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை புதிய திருத்தங்களைச் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சந்தையில் தேங்கியுள்ள பழைய காலணி இருப்புகளை விற்றுத் தீர்க்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, வரும் 2027ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை மத்திய அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. காலணிகள் பருவகாலத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் பொருட்கள் என்பதால், இந்த கூடுதல் கால அவகாசம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த காலக்கெடு முடிவடைந்த பிறகு, தரச்சான்றிதழ் (பிஐஎஸ்) பெற்ற காலணிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும்.
மேலும், புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் காலணி உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு 4,500 ஜோடி காலணிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி செய்யப்படும் இந்த காலணிகளை வணிக ரீதியாக விற்கக் கூடாது என்றும், அவற்றின் மீது "விற்பனைக்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283010®=3&lang=1
செய்தி அடையாள எண்:2283010
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2283080)
आगंतुक पटल : 14