வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த இந்திய தரக் கவுன்சில் - தேசிய சிறுதொழில் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

प्रविष्टि तिथि: 09 JUL 2026 5:14PM by PIB Chennai

இந்தியத் தரக் கவுன்சிலும் தேசிய சிறுதொழில் கழகமும் இன்று (09.07.2026), நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் தரம், போட்டித்திறன், சந்தை அணுகல் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கூட்டுச் சூழலமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒத்துழைப்பானது, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கும் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

தரம், அங்கீகாரம், சான்றளிப்பு ஆகியவற்றில் இந்தியத் தரக் கவுன்சிலும் நிபுணத்துவமும் தேசிய சிறுதொழில் கழகத்தின் விரிவான கட்டமைப்பும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்தக் கூட்டு முயற்சியானது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஒரு ஒருங்கிணைந்த ஆதரவுக் கட்டமைப்பின் மூலம் இரு அமைப்புகளின் பலன்களையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், முக்கிய தேசிய முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

புதுதில்லி, உலக வர்த்தக மையத்தில் உள்ள இந்தியத் தரக் கவுன்சில் அலுவலகத்தில், தேசிய சிறுதொழில் கழகத்தின் தலைவர் டாக்டர் சுப்ரான்சு சேகர் ஆச்சார்யா; இந்தியத் தரக் கவுன்சிலின் மூத்த இயக்குநர் டாக்டர் ஏ. ராஜ் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282891&reg=3&lang=1

(Release ID : 2282891)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2282974) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी