அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வேளாண் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள், விவசாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
08 JUL 2026 6:01PM by PIB Chennai
இந்தியாவின் வேளாண்மை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு பல மடங்கு வளர்ச்சிக்கான வாய்ப்பை அளிப்பதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். இது தற்போதுள்ள ஆண்டு விவசாயப் பொருளாதார மதிப்புடன் தலாக ரூ. 70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சியை அதிகரிக்க உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயத் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை இந்தியாவின் விவசாய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தியாவின் அடுத்தகட்ட புத்தொழில் புரட்சி தொழில்நுட்ப மையங்களுடன், விவசாய நிலங்களிலிருந்தும் உருவாக வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் விவசாயம் என்பது தொழில்முனைவு, வேலைவாய்ப்பு, செல்வம் உருவாக்கம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாக உருவெடுக்க முடியும்.
புதுதில்லியில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த '17-வது விவசாயத் தலைமைத்துவ மாநாடு 2026'-ல் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். எதிர்காலத்திற்கு உணவளித்தல் என்ற கருப்பொருளின் கீழ், இந்திய விவசாயத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க, கொள்கை வகுப்பாளர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், தொழில்துறைத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள்,புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282524®=3&lang=1
(Release ID: 2282524)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2282591)
आगंतुक पटल : 12