வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
டிஜிட்டல் முறையிலான சரக்குப் பரிமாற்ற சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
08 JUL 2026 5:22PM by PIB Chennai
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவனத்தின் சரக்குப் போக்குவரத்துக்கான தரவு சேவை நிறுவனம் - பஞ்சாப் மாநில தொழில்கள், வர்த்தக இயக்குநரகம், ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குப் பரிமாற்ற இடைமுகத் தளம் மூலம், அம்மாநில சரக்கு போக்குவரத்திற்கான சூழலமைப்பின் டிஜிட்டல் நடவடிக்கைகளுக்கு உதவிடும்வகையில், ஜூலை 7, 2026 அன்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம், நிகழ்நேர சரக்குப் போக்குவரத்து குறித்த தரவுகளைத் தடையின்றிப் பரிமாறிக் கொள்வதன் மூலம், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், தரவு சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி அம்மாநிலம் முழுவதும் உள்ள தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், பிற சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களுக்கிடையே பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டு நடவடிக்கை மூலம், துறைகளுக்கிடையே தடையற்ற தரவுப் பரிமாற்றத்தை உறுதி செய்து, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்துக்கான சூழலமைப்பை உருவாக்குவதில் இந்த நிறுவனம், பஞ்சாப் மாநில அரசுக்கு ஆதரவளிக்கும். இந்த முயற்சி உற்பத்தி, விவசாயம், ஏற்றுமதி மையமாக பஞ்சாப் மாநிலத்தின் போட்டித்திறனை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282498®=3&lang=1
(Release ID: 2282498)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2282550)
आगंतुक पटल : 14