நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்குக் கூடுதல் ஓய்வூதிய முதலீட்டுத் தேர்வுகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 07 JUL 2026 5:33PM by PIB Chennai

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வரும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் (CABs) ஊழியர்களுக்கு, திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு முதலீட்டுத் தேர்வுகளை மத்திய அரசு வழங்கவுள்ளது.

 

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, தனது குறிப்பாணை ஒன்றின் மூலம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பிற்குள் வரும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும், நிதிச் சேவைகள் துறை 2025 நவம்பர் 13 அன்று வெளியிட்ட அறிவிக்கையின் அம்சங்களைப் பொருந்தச் செய்துள்ளது.

 

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்காக, எல்சி 75 மற்றும் பிஎல்சி ஆகிய கூடுதல் முதலீட்டுத் தேர்வுகள் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, மத்திய தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கும் இந்த முதலீட்டுத் தேர்வுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம், மத்திய தன்னாட்சி அமைப்புகளைச் சேர்ந்த தகுதியுள்ள ஊழியர்கள், பின்வரும் கூடுதல் முதலீட்டுத் தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்:

 

எல்சி-75 (Aggressive Life Cycle Fund-LC-75 ) என்பது இனி 'எல்சி-75-ஹை' என்று அழைக்கப்படும்: இது, 75% வரை பங்குச் சந்தை முதலீட்டுப் பங்களிப்பைக் கொண்ட ஒரு முதலீட்டுத் தேர்வாகும். நீண்ட காலத்தில் அதிக வளர்ச்சி வாய்ப்பை எதிர்பார்க்கும் சந்தாதாரர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பிஎல்சி (Balanced Life Cycle Fund) என்பது இனி 'Aggressive Life Cycle Fund' என்று அழைக்கப்படும்: இது அதிகபட்சம் 50% வரையிலான பங்குச் சந்தை முதலீட்டுப் பங்களிப்பைக் கொண்ட ஒரு முதலீட்டுத் தேர்வாகும். இதில் 45 வயதிலிருந்து பங்குச் சந்தை முதலீட்டு ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்படும், இதன் மூலம் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையிலான ஒரு சமச்சீரான அணுகுமுறை வழங்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282101&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2282299) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam