அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலோகங்களின் ஒளியியல் பண்புகளை மாற்றியமைக்க புதிய வழியைக் கண்டறிந்து பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் சாதனை
प्रविष्टि तिथि:
07 JUL 2026 4:01PM by PIB Chennai
இயந்திரவியல் அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒளியுடன் உலோகம் தொடர்பு கொள்ளும் தன்மையை மாற்றியமைக்க முடியும் என்பதை பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக நிரூபித்துள்ளனர். உலோகங்களின் ஒளியியல் பண்புகள் மாற்ற முடியாதவை என்ற இயற்பியலின் பல தசாப்தங்களாக இருந்து வரும் கருத்தை இந்த கண்டுபிடிப்பு மாற்றியமைக்கிறது. செமிகண்டக்டர் தயாரிப்புக்கு உகந்த ஒளியியல் சாதனங்களை உருவாக்குவதற்கு புதிய வழிகளை இது உருவாக்குகிறது.
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மெல்லிய டைட்டானியம் நைட்ரைடு படலங்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இயந்திரவியல் அழுத்தம் என்பது உலோகங்களின் ஒளியியல் பண்புகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த காரணி என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் சர்வதேச நானோ லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282020®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2282192)
आगंतुक पटल : 17