சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் கூட்டம் நாக்பூரில் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 07 JUL 2026 2:39PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடுகளின் போக்குவரத்துத்துறை அமைச்சர்களின் 3-வது கூட்டம் வரும் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெறவுள்ளது. உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது குறித்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கவுள்ளனர்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஜூலை 11 அன்று நடைபெறும் இந்த அமைச்சர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். உறுப்பு நாடுகளின் போக்குவரத்துத் துறை தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக இது விளங்குகிறது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், நிலையான விமான எரிபொருள், நகர்ப்புற போக்குவரத்து, பன்முகப் போக்குவரத்து, கார்பன் உமிழ்வைக் குறைத்தல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற வளர்ந்து வரும் புதிய அம்சங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் ஆலோசிக்கவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281964&reg=3&lang=1

***

SS/PD/SH

 


(रिलीज़ आईडी: 2282179) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati