சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியத் தலைநகரைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அமலாக்க நடவடிக்கைகள், விதிமுறை இணக்க நடைமுறை, துறைசார் ஆய்வுகளை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 06 JUL 2026 7:14PM by PIB Chennai

தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் அமலாக்கப் பணிக் குழுவின் 134-வது கூட்டம் 06.07.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள், ஆய்வுகள், விதிமுறை இணக்க நடைமுறைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. 14.06.2026 முதல் 30.06.2026 வரையிலான 17 நாட்கள், ஆணையத்தின் பறக்கும் படைகள் 173 ஆய்வுகளை மேற்கொண்டதாக வர்த்தகப் பரிவர்த்தனை நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட 173 ஆய்வுகளில், 15 ஆய்வுகள் கட்டுமானம், இடிப்புப் பணிக்களங்களிலும், 91 ஆய்வுகள் தொழில்துறைப் பிரிவிலும், 67 ஆய்வுகள் டீசல் ஜெனரேட்டர் தொகுப்புகள் தொடர்பாகவும் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 62 விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளன. இதில் சி & டி தளங்களில் 7-ம், தொழில்துறைப் பிரிவில், 31-ம், டிஜி தொகுப்புகள் தொடர்பாக 24-ம் அடங்கும்.

விதிமீறல்கள் குறித்த ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், 4 அலகுகள்/திட்டங்களை மூடுதல், 27 டிஜி தொகுப்புகளுக்கு முத்திரையிடல் (சீல் வைத்தல்), விதிமுறை இணக்கத்திற்கான 6 உத்தரவுகள்/வழிமுறைகளை வழங்குதல் மற்றும் 17 நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் அபராதம் விதித்தல் ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281801&reg=3&lang=1

(Release ID: 2281801)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2281841) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी