தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியில் உள்ள தகவல் தொடர்பு கணக்குகளுக்கான முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 4:38PM by PIB Chennai
தலைநகர் தில்லி பிரதேசத்தில் வசிக்கின்ற தொலைத்தொடர்புத்துறை, தில்லி சரகத்தில் உள்ள பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் பிரிவுகள் ஆகியவற்றின் ஓய்வூதியதாரர்கள் பிரச்சனைகளை தகவல் தொடர்பு கணக்குகளுக்கான முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் கையாள்கிறது. இவர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் 2026 ஆகஸ்ட் 6 அன்று இந்த அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை cca.dl.[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 ஜூலை 20-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். குறைகளை 1800118119 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டும் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281677®=3&lang=1
***
SS/SMB/LDN/SH
(रिलीज़ आईडी: 2281798)
आगंतुक पटल : 12