பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான தேசிய பயிலரங்கு புவனேஸ்வரில் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 5:51PM by PIB Chennai
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான தேசிய பயிலரங்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 2026 ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்யும் நாடு முழுவதுமுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வது, இந்த நிறுவனங்களை துடிப்புமிக்க அறிவுசார்ந்த நிறுவனங்களாகவும், கலாச்சார வள மையங்களாகவும், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான கொள்கை உதவி மையங்களாகவும் மாற்ற விரிவான செயல்திட்டத்தை வகுப்பது ஆகியவை இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம் இந்தப் பயிலரங்கை வைப்பார். இந்தத் துறையின் இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே, நிதி ஆயோகின் உறுப்பினர் டாக்டர் ஆர் பாலசுப்ரமணியம், பழங்குடியினர் நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரஞ்சனா சோப்ரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
பழங்குடியின கலைகள், கலாச்சாரம், மொழிகள், பாரம்பரிய அறிவு, திறன் மேம்பாடு, ஆகியவற்றை அறிந்துகொள்வதற்காக ட்ரைப் எக்ஸ் என்ற டிஜிட்டல் கற்றல் தளம் தொடங்கி வைக்கப்படுவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். இதில் பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில பழங்குடியினர் நலத் துறைகள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281736®=3&lang=1
***
TV/SMB/LDN/SH
(रिलीज़ आईडी: 2281780)
आगंतुक पटल : 9