சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் சீர்திருத்த விழா & சிந்தனை முகாம் 2026 நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
05 JUL 2026 11:30PM by PIB Chennai
மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, சட்டமியற்றல் துறை இணைந்து நடத்திய சீர்திருத்த விழா & சிந்தனை முகாம் 2026 நிறைவடைந்தது. ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் ஜூலை 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை முன்னிறுத்தி, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, பொதுமக்களை மையமாகக் கொண்ட சட்ட அமைப்பை உருவாக்கும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், சட்ட நவீனமயமாக்கல், மின்னணு மாற்றம், தொழில்நுட்பப் பயன்பாடு, வழக்குகளை திறம்பட நிர்வகித்தல், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான மாற்று நடைமுறைகளை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு, துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய சட்டம், நீதித் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நீதி விரைவாக வழங்கப்படுவது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என வலியுறுத்தினார். அமைச்சகத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அர்த்தமுள்ள சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281418®=3&lang=1
***
SS/PD/RJ
(रिलीज़ आईडी: 2281709)
आगंतुक पटल : 12